இந்தியா கூட்டணியில் மேலும் விரிசல்.. அரவிந்த் கெஜ்ரிவால் மீது ராகுல் காந்தி விமர்சனம்..!

Siva
செவ்வாய், 14 ஜனவரி 2025 (12:56 IST)
இந்தியா கூட்டணியில் ஏற்கனவே விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது அரவிந்த் கெஜ்ரிவால் பொய்யான வாக்குறுதிகளை டெல்லி தேர்தல் பிரச்சாரத்தில் அளித்து வருகிறார் என ராகுல் காந்தி குற்றம் சாட்டி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலின் போது எதிர்க்கட்சிகள் இந்தியா கூட்டணி என்ற ஒரு கூட்டணி ஆரம்பித்த நிலையில், அந்த கூட்டணியால் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் இந்தியா கூட்டணி படிப்படியாக உடைந்து வருவதாக புறப்படுகிறது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெறும் உள்ளாட்சி தேர்தலில் இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் தனித்தனியாக போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் டெல்லியில் தேர்தல் பிரச்சாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில்,  எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, அரவிந்த் கெஜ்ரிவால் பொய்யான வாக்குறுதி அளிப்பதாகவும், ஜாதி வாரி கணக்கெடுப்பை குறித்து எதுவும் பேசவில்லை என்றும் விமர்சனம் செய்துள்ளார்.

பிரதமர் மோடியுக்கும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்றும், பிரதமர் மோடியும், கெஜ்ரிவாலும் பணவீக்கத்தை குறைப்பதாக வாக்குறுதி அளித்தனர், ஆனால் அது தோல்வியில் முடிந்தது. சாதி வாரி   கணக்கெடுப்பு குறித்து இருவருமே பேசவில்லை என்றும் விமர்சனம் செய்துள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்