பின்வாங்கப்படுமா வேளாண் சட்டம்? மோடி அவசர ஆலோசனை!

Webdunia
சனி, 5 டிசம்பர் 2020 (12:21 IST)
விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் பிரதமர் மோடி வேளாண் சட்டங்கள் குறித்து முக்கிய ஆலோசனை. 
 
மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டுமென பஞ்சாப், ஹரியாணா மாநில விவாசாயிகள் லட்சக்கணக்கானோர் டெல்லியில் இன்று 10வது நாளாகப் போராடி வருகின்றனர்.  
 
இப்போரட்டத்திற்கு பல்வேறு எதிர்கட்சிகள் ஆதரவு அளித்துவரும் நிலையில் வரும் 8 ஆம் தேதி நாடு முழுவதும் முழு அடைப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
இந்நிலையில் மத்திய அரசு இன்று விவசாயிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளது. இதுவரை நடத்தப்பட்ட நான்கு கட்ட பேச்சுவார்த்தைகளில் சுமூக உடன்பாடு எட்டப்படாத நிலையில் இன்றேனும் இதற்கு சுமுக தீர்வு கிடைக்குமா என எதிர்நோக்கப்பட்டுள்ளது. 
 
இதனிடையே தற்போதைய தகவலின் படி வேளாண் சட்டங்கள் குறித்து பிரதமர் மோடி முக்கிய ஆலோசனையில் ஈடுப்பட்டுள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், நரேந்திர சிங் தோமர், பியூஷ் கோயல் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்