ரயிலில் வழங்கப்பட்ட உணவை சாப்பிட்ட 40 பேருக்கு ஒவ்வாமை!

Webdunia
புதன், 29 நவம்பர் 2023 (12:29 IST)
சென்னை - புனே சென்ற சுற்றுலா ரயிலில் வழங்கப்பட்ட  உணவை சாப்பிட்ட பயணிகளுக்கு  ஒவ்வாமை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
 
சென்னையிலிருந்து புனே சென்ற சுற்றுலா ரயிலான கவுரவ் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த பயணிகளுக்கு  உணவு வழங்கப்பட்டது.
 
இந்த உணவை சாப்பிட்ட 40 பயணிகளுக்கு திடீரென்று ஒவ்வாமை பாதிப்பு ஏற்பட்டது.
 
ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த 40 பேருக்கும் ஒரே      நேரத்தில் உணவு ஒவ்வாமை ஏற்பட்டு  அவர்கள் பாதிக்கப்ப்ட்டது குறித்து, ரயில்வே அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.
 
உணவு ஒவ்வாமையால் பாதிக்கப்பட்ட பயணிகள் அனைவரும் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவ்ம பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்