அதிமுக எம்.பி மைத்ரேயன் கண்ணீர் உரை ...உறுப்பினர்கள் நெகிழ்ச்சி

Webdunia
புதன், 24 ஜூலை 2019 (14:38 IST)
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்து மூன்றாண்டுகள் ஆகப்போகிறது. அதிமுக கட்சியை தன் கையில் கட்டுக்கோப்பாக வைத்து ஆட்சியை  வழி நடத்தினார். அவர் இருந்தவரைக்கும் அக்கட்சியில் உள்ள யாரும் அவரது அனுமதியுடன் பேச முடியாது. இந்நிலையில் இன்று கட்சியின் ஏற்பட்ட தலைமைப் பதவிக்கான இடத்தை ஓ.பி.எஸ். இ.பி. எஸ் ஆகிய இருவரும் நிரப்பி வருகின்றனர்.
ஜெயலலிதாவின் வெற்றி எம். ஜி. ஆரின் சரித்திர வெற்றியைப் போல் இருமுறை தொடர்ந்து ஆட்சியை பிடித்துள்ளது. ஆனால் சமீபத்திய மக்களவைத் தேர்தலில் 37 தொகுதிகளில் அதிமுக தோற்றது. ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது.
 
இந்நிலையில் அதிமுக மாநிலங்களை உறுப்பினராக உள்ள மைத்ரேயனின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைகிறது. எனவே நாடாளுமன்றத்தில் தனது கடைசி உரையை அவர் கண்ணீருடன் நிகழ்த்தினார்.

அவர் கூறியதாவது :முன்னாள் முதல்வர் என் மீது நம்பிக்கை வைத்து நாடாளுமன்றத்திற்கு 3 முறை அனுப்பி வைத்ததை மிகவும் உருக்கத்துடன் அவர் நினைவு கூர்ந்தார்.
 
மேலும் இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட போது நாடாளுமன்றத்தில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படாததால் தனக்கு நாளை எதாவதும் நிகழ்ந்தால் கூட இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படக்கூடாது என்று உருக்கமாகப் பேசினார்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்