ஒரு வருடத்தில் 1300% உயர்ந்த பங்கு! – வாயை பிளக்க வைத்த அதானி நிறுவனம்!

Webdunia
செவ்வாய், 15 செப்டம்பர் 2020 (18:30 IST)
கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பால் பல நிறுவனங்களின் பங்குகள் வீழ்ச்சியை சந்தித்து வரும் நிலையில் அதானி நிறுவனம் பெரும் வளர்ச்சி பெற்றிருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா காரணமாக பங்கு சந்தை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வந்த நிலையில் இன்று சென்செக்ஸ் 228 புள்ளிகளும், நிஃப்டி 82 புள்ளிகளும் உயர்ந்துள்ளன. அப்படியும் கூட டெக் மஹிந்திடா, ஹெச்சிஎல், விப்ரோ உள்ளிட்ட பெரும் நிறுவனங்களின் பங்குகள் சரிவையே சந்தித்துள்ளன.

ஆனால் மும்பை பங்குசந்தை மதிப்பீட்டில் அதானி க்ரீன் நிறுவனத்தின் பங்குகள் 5% உயர்ந்துள்ளன. மேலும் அதானி க்ரீன் நிறுவனத்தின் பங்குகள் முதன்முறையாக 1 ட்ரில்லியனை தொட்டுள்ளது. இதனால் கடந்த ஒரு ஆண்டிற்குள்ளாக அதானி க்ரீன் நிறுவன பங்கு மதிப்புகள் 1300% முந்தைய மதிப்பை விட உயர்ந்துள்ளது.

சமீபத்தில் மத்திய அரசியம் சோலார் மின் உற்பத்தி ஒப்பந்தம் பெற்றுள்ள அதானி நிறுவனம் அதில் ரூ.45 ஆயிரம் கோடி முதலீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்