உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த சில மாதங்களாகவே தமிழர்களுக்கு ஆதரவாகவும், தமிழக அரசியல்வாதிகளுக்கு எதிராகவும் தனது டுவிட்டரில் அதிரடி கருத்துக்களை தெரிவித்து வருகிறார். அந்த வகையில் அவர் மீது ஆத்திரம் அடைந்த ஒருசிலர் வழக்கும் போட்டுள்ளனர்.
இந்த நிலையில் இன்று டெல்லி சென்ற நடிகர் கமல், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அவர்களை அவரது அலுவலகத்தில் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது பொன்னாடை போர்த்தி கமலை வரவேற்ற அமைச்சர், தமிழக அரசியல் நிலவரம் குறித்து ஆலோசித்ததாக தெரிகிறது.
பாஜக கடந்த சில மாதங்களாகவே ஏதாவது ஒரு பெரிய நடிகரை தனது கட்சியில் வளைத்து போட முயற்சி செய்து கொண்டிருக்கும் நிலையில் கமல் -பொன்ராதாகிருஷ்ணன் சந்திப்பு முக்கியத்தும் ஆனதாக கருதப்படுகிறது.
இந்த சந்திப்பு குறித்து அமைச்சர் தனது டுவிட்டரில், சற்றுமுன் மரியாதை நிமித்தமாக என்னை புதுடெல்லியில் நடிகர் கமல்ஹாசன் அவர்கள் சந்தித்தார்.' என்று குறிப்பிட்டுள்ளார்.