4 கிமீக்கு ஒரு பள்ளிக்கூடம்: குஜராத் மக்களுக்கு வாக்குறுதி கொடுத்த ஆம் ஆத்மி!

செவ்வாய், 18 அக்டோபர் 2022 (16:28 IST)
குஜராத் மாநிலத்தில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 4 கிலோ மீட்டருக்கு ஒரு பள்ளிக்கூடம் திறக்கப்படும் என ஆம் ஆத்மி கட்சி வாக்குறுதி அளித்துள்ளது
 
குஜராத் மாநிலத்தில் விரைவில் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியைப் பிடிக்க தீவிரமாக பிரசாரம் செய்து வருகிறது
 
ஏற்கனவே டெல்லி மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் ஆட்சியை பிடித்துள்ள ஆம் ஆத்மி கட்சி மூன்றாவது மாநிலத்திலும் ஆட்சியை பிடிக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் 
 
இந்த நிலையில் வருடத்திற்கு 2 சிலிண்டர் இலவசம் என பாஜக வாக்குறுதி அளித்துள்ள நிலையில் நான்கு கிலோ மீட்டருக்கு ஒரு பள்ளி அமைத்துத் தருவோம் என ஆம் ஆத்மி கட்சியை வாக்குறுதி அளித்துள்ளது 
 
பாஜக மற்றும் ஆம் ஆத்மி கட்சி தீவிர பிரச்சாரம் செய்து வரும் நிலையில் காங்கிரஸ் கட்சி இன்னும்  பிரச்சாரத்தை ஆரம்பிக்காமல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்