பெற்ற மகளை நரபலி கொடுத்த தந்தை...குஜராத்தில் அதிர்ச்சி சம்பவம்

சனி, 15 அக்டோபர் 2022 (19:52 IST)
குஜராத் மாநிலத்தில் மூட நம்பிக்கையால் சிறுமியை சித்ரவதை செய்து தந்தை கொன்ற சம்பவம் பெரும்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் கேரள மாநிலத்தில் மாந்திரீகம் என்ற பெயரில் ஒரு மந்திரவாதியின் பேச்சைக் கேட்டு, இரண்டு பெண்களை  மருத்துவர்கள் குடும்பம் நரமாமிசம் சாப்பிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இதேபோன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது. குஜராத் மா நிலம்  கிர்சோம் நாத் என்ற மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வரும் பெற்றோர், தங்களின் 14 வயது மகளை நரபலி கொடுத்ததால் பணம் செழிக்கும் என்ற மூட நம்பிக்கையில் , கடந்த அக்டோபர் 3 ஆம் தேதி கொன்றதாகத் தெரிகிறது.

இந்தக் கொடூர சம்பவம் அங்குள்ள ஒரு பண்ணையில் வைத்து நடந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து, போலீஸார், சிறுமியின் தந்தையான பவேஷ் அக்பரிடம் விசாரித்தபோது, அவர் முன்னுப்பின் முரணான பதில் அளித்ததாகவும், இதுகுறித்து  மேலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Edited by Sinoj

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்