உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் கடந்த ஆகஸ்ட் 29 ஆம் தேதி, உயிர்கொல்லி நோயால் பாதிக்கப்பட்ட தனது கணவரை தனியார் மருத்துவமனையில் அனுமதித்து பெண் ஒருவர் பார்த்து வந்துள்ளார். தனியார் மருத்துவமனையில் தொடர்ந்துசிகிச்சை அளிக்க போதிய பணம் இல்லாததால் கணவரை அங்கிருந்து டிஸ்சார்ஜ் செய்து தனியார் ஆம்புலன்ஸில் மனைவி அழைத்துச் சென்றுள்ளார். கணவனின் சகோதரனும் அவர்களுடன் சென்றுள்ளார்.
இந்நிலையில் ஆம்புலன்ஸை பாதி வழியிலேயே நிறுத்திவிட்டு ஓட்டுனரும், உதவியாளரும் அந்த பெண்ணை பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. அவர்களுக்கு பெண் ஒத்துழைக்க மறுத்ததால் கணவனின் ஆச்சிஜன் சப்போர்ட்-ஐ அவர்கள் துண்டித்து மூவரையும் ஆம்புலன்சில் இருந்து வெளியே தள்ளி விட்டுள்ளனர். ஆக்சிஜன் சப்போர்ட் இல்லாமல் அந்த பெண்ணின் கணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.