நிலக்கரி திருட்டு வழக்கு: மம்தா பானர்ஜியின் மருமகனுக்கு சம்மன்!

Webdunia
வியாழன், 17 மார்ச் 2022 (12:18 IST)
நிலக்கரி திருட்டு வழக்கில் மம்தா பானர்ஜியின் மருமகனுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
நிலக்கரி திருட்டு வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும்படி மம்தா பானர்ஜியின் மருமகன் அபிஷேக் பானர்ஜி அவரது மனைவி ருஜிரா ஆகிய இருவருக்கும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது
 
மேற்கு வங்க மாநிலத்தில் நிலக்கரி கொள்ளையர்களிடமிருந்து அபிஷேக் மற்றும் அவரது மனைவி ருஜிரா பணம் பெற்றதாக குற்றச்சாட்டு கூறப்பட்டதை அடுத்து இது குறித்து அமலாக்கத் துறை விசாரணை செய்து வருகிறது
 
ஏற்கனவே இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி அபிஷேக் பானர்ஜி தொடர்ந்த மனு நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து தற்போது அவரை விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்