முன் அறிவிப்பின்றி விடுப்பு எடுத்த 236 ஊழியர்களை நிறுவனம் ஒன்று வேலையில் இருந்து நீக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புனேவில் செயல்பட்டு வரும் பிரபல கார் பாகங்கள் உற்பத்தி செய்யும் நிறுவனத்தில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் வேலை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் அந்த நிறுவனத்தில் வேலை செய்யும் 236 ஊழியர்களை அந்நிறுவனம் ஒரே நேரத்தில் வேலையில் இருந்து நீக்கிவிட்டது. இதுகுறித்து விளக்கமளித்துள்ள அந்நிறுவனம் அந்த 236 பேரும் எந்த முன்னறிவிப்பும் இன்றி ஒரு மாதம் விடுப்பு எடுத்ததாகவும், விடுப்பு எடுத்ததற்காக சரியான காரணத்தை கூறாததாலும் அவர்கள் நீக்கப்பட்டிருப்பதாக கூறியுள்ளது.