75 கோடி இந்தியர்கள் இணையத்தை பயன்படுத்துகின்றனர்.. ஆய்வில் ஆச்சரிய தகவல்..!

Webdunia
வெள்ளி, 5 மே 2023 (07:48 IST)
இந்தியாவில் சுமார் 145 கோடி மக்கள் தொகை இருக்கும் நிலையில் அவற்றில் பாதி பேர் அதாவது 75 கோடி பேர் இணையத்தை பயன்படுத்துகின்றனர் என்று ஆய்வில் தகவல் வெளியாகி உள்ளது.

உலகம் முழுவதும் இணையத்தைப் பயன்படுத்தும் நபர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இந்தியாவில் இணையத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கை தற்போது 75 கோடியாக உள்ளது என்றும் 2025 ஆம் ஆண்டில் அது 90 கோடியாக உயரும் என்றும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இணையத்தை பயன்படுத்துவோரில் 36 கோடி பேர் நகர்ப்புறங்களை சேர்ந்தவர்கள் என்றும் 39 கோடி பேர் கிராம பகுதியை சேர்ந்தவர்கள் என்றும் கிராமப்புறத்தில் உள்ளவர்கள் நகர்புறத்தில் உள்ளவர்களை விட அதிகமாக இணையத்தை பயன்படுத்துகின்றனர் என்றும் ஆய்வில் தகவல் தெரிவித்துள்ளது.

உலக மக்கள் தொகையில் 75 கோடி இணையத்தை பயன்படுத்தும் நபர்கள் இந்தியர்கள் என்ற தகவல் பெறும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்