உத்தரபிரதேசம் மாநிலத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலில் பாஜக பெரிய அளவிலான வெற்றியை பெற்றது. இதையடுத்து பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 11 வயது சிறுமி அகீதாத் நாவீத், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதில்,
மக்களின் இதயத்தை வெல்வது என்பது மகத்தான பணியாகும் என என்னுடைய தந்தை கூறியுள்ளார். ஒருவேளை நீங்கள் இந்திய மக்களின் இதயத்தை வென்று இருக்கலாம், அதனால் நீங்கள் உத்தரபிரதேசம் தேர்தலில் வெற்றி பெற்று இருக்கலாம். ஆனால் நான் உங்களிடம் சொல்ல விரும்புவது நீங்கள் மேலும் இந்தியர்கள் மற்றும் பாகிஸ்தானியர்களின் இதயத்தை வெல்ல வேண்டும்,
இரு நாடுகள் இடையேயும் அமைதி பாலத்தை ஏற்படுத்த வேண்டும், நாம் புல்லட்கள் வாங்க கூடாது, புத்தகங்கள் வாங்கவேண்டும் என முடிவு செய்ய வேண்டும். நாம் இனி துப்பாக்கிகளை வாங்க கூடாது, ஏழை மக்களுக்கு மருத்துவம் வழங்க வேண்டும், என குறிப்பிட்டுள்ளார்.