ஏர்டெல் 4 ஜி விளம்பரத்தை திரும்ப பெற வேண்டும் : மத்திய அரசு

Webdunia
சனி, 3 அக்டோபர் 2015 (06:46 IST)
பார்தி  ஏர்டெல் நிறுவனத்தின்  4ஜி ஸ்பீட் சேலஞ் விளம்பரத்தை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 


 
 
பிரபல தனியார் தொலைத் தொடர்பு நிறுவனமான பார்தி  ஏர்டெல் நிறுவனத்தின்  4ஜி ஸ்பீட் சேலஞ் விளம்பரம் பட்டி தொட்டியெல்லாம் ஹிட்டித்து வருகிறது.
 
எங்கள் நிறுவனம் அளிக்கும் இணைய சேவை தான் அதிவேகமானது. சவாலை ஏற்று வெற்றி பெற்றால் வாழ்முழுவதும் கட்டணமில்லாத சேவை வழங்கப்படும் என்பது தான் அந்த விளம்பரத்தின் சாரம்சம்.
 
மற்ற தொலைத் தொடர்பு நிறுவனங்களின் சேவையை கேளிக்கூத்தாக்கும் வகையில் இந்த விளம்பரம் தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த விளம்பரம் மக்களை தவறாக வழிநடத்துவதாக  இந்திய விளம்பர கட்டுப்பாட்டு ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது.
 
மேலும் ஏர்டெலின் 4ஜி சவால் விளம்பரத்தை உடனடியாக திரும்ப பெறும்படி பாரதி ஏர்டெல் நிறுவனத்தை விளம்பர கட்டுப்பாட்டு ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.
 
ஆனால் விளம்பர கட்டுப்பாட்டு ஆணையத்தின் கண்டனத்திற்கு ஏர்டெல் நிறுவனம் பதில் அளித்துள்ளது. அதிவேக இன்டர்நெட் சேவையை தர முடியும் என்ற காரணத்தினால், பல்வேறு சோதனைகளுக்கு பிறகே இந்த விளம்பரத்தை வெளியிட்டு இருப்பதாக ஏர்டெல் விளக்கம் அளித்துள்ளது.