கிளாட் என்னும் சட்ட நுழைவுத்தேர்வுக்கு எப்போது விண்ணப்பிக்கலாம்? முக்கிய அறிவிப்பு..!

Mahendran
வெள்ளி, 19 ஜூலை 2024 (14:25 IST)
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள 24 தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களில் இளநிலை முதுநிலை படிப்பில் சேர்வதற்கு கிளாட் என்னும் சட்ட நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றால் மட்டுமே தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களில் இடம் கிடைக்கும் என்ற நிலையில் இந்த தேர்வு குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

2024-25 ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை சேர்கைக்கான கிளாட் சட்ட நுழைவு தேர்வு டிசம்பர் ஒன்றாம் தேதி பிற்பகல் 2 மணி முதல் 4 மணி வரை நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டுதான் 24 தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கிளாட் சட்ட நுழைவு தேர்வுக்கு இணையதளங்கள் மூலம் விண்ணப்பம் செய்யலாம் என்றும் அக்டோபர் 15ஆம் தேதிக்குள் consortiumofnlus.ac.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் விண்ணப்பித்து இந்த சட்ட பல்கலைக்கழகங்களில் சேர்ந்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே 24 தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களில் இணைந்து சட்டம் படிக்க விரும்பும் மாணவர்கள் மேற்கண்ட இணையதளத்தில் உடனடியாக விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்