சபரிமலை வரலாற்றை சுக்குநூறாக்கிய இருபெண்கள்: உச்சகட்ட பரபரப்பில் கேரளா

Webdunia
புதன், 2 ஜனவரி 2019 (10:44 IST)
சபரிமலைக்குள் இரண்டு பெண்கள் சென்று சுவாமி தரிசனம் செய்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என சுப்ரீம் கோர்ட் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியது. இந்த தீர்ப்பை அடுத்து ஒருசில பெண்கள் சபரிமலைக்கு செல்ல முயன்றபோதிலும் பக்தர்களின் போராட்டம் காரணமாக பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். ஆனால் எதிர்ப்பை மீறி சபரிமலைக்கு செல்வோம் என பெண்கள் அமைப்புகள் சில போராடி வந்தனர்.
 
பெண்களுக்கு எதிராக பல்வேறு தரப்பினர் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து வந்தனர். பெண்கள் சபரிமலைக்கு செல்லலாம் எனவும் அவர்களுக்கு உச்சகட்ட போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும் என அரசு கூறியிருந்தது.
 
பெண்கள் சபரிமலைக்கு செல்வதை தடுக்கும் அமைப்புகளை எதிர்த்து மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் 630 கிலோ மீட்டர் தூரம் ''பெண்கள் சுவர்'' போராட்டத்தை நேற்று நடத்தினர்.
 
இந்நிலையில் மலப்புரம் பகுதியை சேர்ந்த கனகதுர்கா (46) மற்றும் கோழிக்கோடு பகுதியை சேர்ந்த பிந்து(40) ஆகிய இருவர் இன்று அதிகாலையில் சபரிமலைக்குள் சென்று தரிசனம் செய்துள்ளனர். இதனையடுத்து கோவிலின் சன்னிதானம் தற்பொழுது மூடப்பட்டுள்ளது. மேலும் சபரிமலை சுற்றியுள்ள பகுதிகளில் உச்சகட்ட பரபரப்பில் காணப்படுகிறது. கோவிலுக்குள் இருக்கும் பக்தர்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். பல ஆயிக்கணக்கான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்