17 சுற்று பீரங்கி குண்டுகள் முழங்க, 800 வீரர்களின் மரியாதையுடன் பிபின் ராவத் உடல் தகனம்!

Webdunia
வெள்ளி, 10 டிசம்பர் 2021 (17:51 IST)
முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், மதுலிகா ராவத்தின் உடலுக்கு இறுதிச் சடங்கு செய்யப்பட்டது. 

 
குன்னூரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியத்தில் அதில் பயணித்த முப்படை தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தேசிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஹெலிகாப்டர் விபத்து குறித்து தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 
 
இந்நிலையில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், மதுலிகா ராவத்தின் உடலுக்கு இறுதிச் சடங்கு செய்யப்பட்டது. இருவரின் உடல்களுக்கு அவரது 2 மகள்கள் இறுதி சடங்குகளை செய்தனர். பின் ராவத்தின் உடல் மீது பொருத்தப்பட்டிருந்த தேசிய கொடி அவரது மகள்களிடம் ஒப்படைக்கப்பட்டது. 
 
பின்னர் தகன மேடைக்கு பிபின் ராவத்தின் உடல் கொண்டு செல்லப்பட்டது. ஒரே தகன மேடையில் இருவரது உடல்களும் வைக்கப்பட்டன. தாய், தந்தை இருவரது உடல்களுக்கும் மகள்கள் தீ மூட்டினர். 17 சுற்று பீரங்கி குண்டுகள் முழங்க 800 வீரர்களின் மரியாதையுடன் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், மனைவி மதுலிகா ராவத் உடல்  தகனம் செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்