sweggy நிறுவனத்தில் ஊழியர்கள் பணிநீக்கம்...

Webdunia
திங்கள், 18 மே 2020 (15:41 IST)
இந்தியாவில் பிரசித்தி பெற்ற உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கி 1100 ஊழியர்களை பணியில் இருந்து நீக்கியுள்ளதாக செய்திகள் வெளியாகிறது.

இதுகுறித்து அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான ஸ்ரீஹர்ஷா மஜெட்டி தனது ஊழியர்களுக்கு அனுபியுள்ள மின்னஞ்சல் செய்தியில் கூறியுள்ளதவாது :

கொரோனா தாக்கத்தால் உணவு டெலிவரி வர்த்தகம் கடுமையாக பாதிப்படைந்துள்ளது. அதனால் நிறுவனத்தில் குறைவான ஊழியர்களைக் கொண்டு செயல்பட முடிவு செய்துள்ளோம் என என தெரிவித்துள்லார்.

மேலும், நிறுவனத்தால் பணி நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு 5 ஆண்டுகள் அங்கு பணிபுரிந்து இருந்தால் அடுத்த 8 மாதங்களுக்கு , எவ்வித பிடித்தமின்றி ஊதியம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

அத்துடன்  பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள் மற்றும் அவர்களின்  குடும்ப உறுப்பினர்களுக்கு இந்த ஆண்டின் இறுதிவரை மருத்துவம், விபத்துக்காப்பீடு வழங்கப்படும் என கூறியுள்ளார்.

ஸ்விக்கி நிறுவனத்தால் நீக்கப்பட்டவர்களுக்கு இந்த செய்தி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்