’இரண்டாம் குத்து’ இயக்குனரின் அடுத்த பட டைட்டில் இதுதான்!

Webdunia
ஞாயிறு, 22 நவம்பர் 2020 (08:06 IST)
ஹரஹர மகாதேவி, இருட்டு அறையில் முரட்டுகுத்து, கஜினிகாந்த் ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் சந்தோஷ் ஜெயக்குமார் சமீபத்தில் இரண்டாம் குத்து என்ற திரைப்படத்தில் நடித்து அந்தப் படத்தை இயக்கியிருந்தார்
 
இந்த படம் தீபாவளி அன்று வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு பல்வேறு சர்ச்சைக்குரிய விமர்சனங்கள் வெளிவந்து கொண்டு இருந்தது என்பதும் பாரதிராஜா உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் இந்த படத்திற்கு கடும் கண்டனங்களை தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
’இரண்டாம் குத்து’ இயக்குனரின் அடுத்த பட டைட்டில் இதுதான்!
அதுமட்டுமின்றி இந்த படத்தின் டிரைலரை சமூக வலைதளத்தில் இருந்து நீக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தன்மீது எழுந்த எந்த விமர்சனத்தையும் கண்டு கொள்ளாமல் அடுத்த பட அறிவிப்பை தற்போது சந்தோஷ்குமார் வெளியிட்டுள்ளார் 
 
சந்தோஷ்குமார் அடுத்து இயக்கவுள்ள படத்தின் டைட்டில் ’மிஸ்டர் வெர்ஜின்’ என்று வைக்கப்பட்டுள்ளது. இந்த படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்