தங்கம் விலை இன்றும் சரிவு.. சென்னையில் இன்று ஒரு சவரன் எவ்வளவு?

Siva
புதன், 26 ஜூன் 2024 (12:02 IST)
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் நேற்று தங்கம் விலை சவரனுக்கு 160 ரூபாய் குறைந்த நிலையில் இன்றும் அதே அளவு குறைந்துள்ளது. இந்த நிலையில் இன்று சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை என்ன என்பதை தற்போது பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து ரூபாய் 6,660 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 160 குறைந்து ரூபாய் 53,280 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒருசில நாட்களில் ஒரு சவரன் ரூ.54,000ஐ நெருங்கிவிடும் என்று கூறப்படுகிறது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,130  எனவும் ஒரு சவரன் ரூபாய் 57,040 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை  ஒரு கிராம் 94.50 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 94,500.00 எனவும் விற்பனையாகி வருகிறது.
 
 
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்