இந்திய பங்குச் சந்தை நேற்று சிறிய அளவில் சரிந்த நிலையில் இன்றும் சிறிய அளவில் சரிந்து வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று முன்தினம் இந்திய பங்குச்சந்தை மிகப்பெரிய அளவில் உயர்ந்தது என்பதும் சென்செக்ஸ் கிட்டத்தட்ட 1400 புள்ளிகள் உயர்ந்ததால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் நேற்று சிறிய அளவில் பங்குச்சந்தை சரிந்த நிலையில் இன்றும் சரிவுடன் பங்குச்சந்தை வர்த்தகம் தொடங்கியுள்ளது. மும்பை பங்கு சந்தை சென்செக்ஸ் 92 புள்ளிகள் சரிந்து 78,159 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது . அதே போல் தேசிய பங்குச் சந்தை நிப்டி 31 புள்ளிகள் மட்டும் சார்ந்து 23 ஆயிரத்து 664 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
இன்றைய பங்குச்சந்தையில் சிப்லா, பஜாஜ் பைனான்ஸ், ஹீரோ மோட்டார்ஸ், இன்ஃபோசிஸ், இண்டஸ் இண்ட் வங்கி, எச்.சி.எல் டெக்னாலஜி, ஆசியன் பெயிண்ட், பிரிட்டானியா, ஐசிஐசிஐ வங்கி, ஹிந்துஸ்தான் லீவர், டெக் மகேந்திரா, டாடா மோட்டார்ஸ், சன் பார்மா உள்ளிட்ட பங்குகள் உயர்ந்துள்ளன.
அதே நேரத்தில் ஆக்சிஸ் வங்கி, டிசிஎஸ், ஸ்டேட் வங்கி, மாருதி, கோடக் மகேந்திரா வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி, பாரதி ஏர்டெல் உள்ளிட்ட பங்குகள் சரிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.