பங்குச்சந்தை இன்று மீண்டும் சரிவு.. மீளவே முடியாத முதலீட்டாளர்கள்..!

Siva
செவ்வாய், 4 மார்ச் 2025 (11:02 IST)
பங்குச்சந்தை இன்று மீண்டும் சரிந்துள்ளதை அடுத்து, முதலீட்டாளர்கள் ஆழ்ந்த கவலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
 
பங்குச்சந்தை கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக தொடர்ந்து சரிந்து கொண்டிருந்த நிலையில், நேற்று பங்குச்சந்தை ஆரம்பத்தில் சிறிது உயர்ந்தாலும் வர்த்தக முடிவின்போது மீண்டும் சரிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில், இன்று காலை வர்த்தகம்  தொடங்கியது முதல் சரிந்து கொண்டு தான் உள்ளது. சற்றுமுன், மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 167 புள்ளிகள் சரிந்து, 72,945 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதே போல், தேசிய பங்குச்சந்தை நிப்டி 46 புள்ளிகள் உயர்ந்து, 22,074 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
 
இன்றைய பங்குச்சந்தையில் ஸ்டேட் வங்கி, டாட்டா ஸ்டீல், டி.சி.எஸ்., இன்டஸ் இண்ட் வங்கி, டாடா மோட்டார்ஸ், எச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசி வங்கி உள்ளிட்ட பங்குகள் உயர்ந்துள்ளன. 
 
அதேபோல், கோடக் மகேந்திரா வங்கி, டெக் மகேந்திரா, ஆக்சிஸ் வங்கி, மாருதி, ஐடிசி, பஜாஜ் பைனான்ஸ், ஆசியான் பெயிண்ட், ஹிந்துஸ்தான் லீவர், பாரதி ஏர்டெல், சன் பார்மா, இன்போசிஸ், டைட்டன் உள்ளிட்ட பங்குகள் சரிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்