பங்குச்சந்தை இன்று ஒரே நாளில் சுமார் 700 புள்ளிகள் வரை சென்செக்ஸ் உயர்ந்து உள்ளதை அடுத்து முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த சில வாரங்களாகவே பங்குச்சந்தைப்பாடு மோசமாக சரிந்து வருகிறது என்றும் குறிப்பாக அதானி நிறுவனங்களின் பங்குகள் குறைந்துள்ளதால் பங்குச்சந்தையில் முதலீடு செய்தவர்கள் பெரும் நஷ்டம் அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்று காலை பங்கு சந்தை தொடக்கத்திலேயே ஏற்றத்தில் உள்ளது. சற்றுமுன் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 650 புள்ளிகளுக்கு மேல் அதிகரித்து 58,607 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
அதேபோல் தேசிய பங்கு சந்தையான நிப்டி 180 புள்ளிகள் அதிகரித்து 17,260 என்ற புள்ளிகளில் வர்த்தகமாக வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பங்குச்சந்தை இதேரீத்யியில் உயருமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்