பட்ஜெட் தினத்தில் எகிறும் பங்குச்சந்தை.. மீண்டும் 60 ஆயிரத்தை தாண்டுமா சென்செக்ஸ்?

Webdunia
புதன், 1 பிப்ரவரி 2023 (09:49 IST)
கடந்த சில நாட்களாக அதானி நிறுவனத்தின் பங்குகள் சரிந்ததன் காரணமாக ஒட்டுமொத்த பங்குச்சந்தை மிகப்பெரிய அளவில் சரிந்தது என்பதும் இதனால் முதலீட்டாளர்கள் பெரும் நஷ்டம் அடைந்தனர் என்பதை பார்த்து வந்தோம். 
 
இந்த நிலையில் இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்ய இருப்பதை அடுத்து பட்ஜெட்டில் புதிய சலுகை அறிவிப்புகள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
இதனை அடுத்து சற்று முன் பங்குச்சந்தை வர்த்தகம் தொடங்கிய நிலையில் சுமார் 350 புள்ளிகள் சென்செக்ஸ் உயர்ந்துள்ளது. அதேபோல் 100 புள்ளிகள்  நிப்டி உயர்ந்துள்ளது. பட்ஜெட் தாக்கல் செய்ய ஆரம்பித்தவுடன் இன்னும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
 தற்போது சென்செக்ஸ் 59 ஆயிரத்து 910 என்ற நிலையில் வர்த்தகமாகி வரும் நிலையில் 60 ஆயிரத்தை மீண்டும் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேசிய பங்கு சந்தை நிப்டி 17,760 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்