பெட்ரோல் தேவை 70 சதவீதம் குறைவு! – பேரல் கணக்கில் கையிறுப்பு!

Webdunia
வியாழன், 9 ஏப்ரல் 2020 (12:22 IST)
நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருப்பதால் பெட்ரோல் தேவை மிகவும் குறைந்துள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அனைத்து வகையான போக்குவரத்துகளும் நிறுத்தப்பட்டுள்ளன. அதனால் பெட்ரோல், டீசல் விற்பனை பெருமளவில் குறைந்துள்ளது.

வழக்கமான நாட்களில் பெட்ரோல் விற்பனையை விட தற்போது 70 சதவீதம் வரை பெட்ரோல் விற்பனை குறைந்துள்ளது. இதனால் பெட்ரோலிய பொருட்களை அதிகளவு பயன்படுத்தும் நாடுகளின் பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்திற்கு சரிந்துள்ளது.

இதனால் ஒன்றரைக் கோடி பேரல் பெட்ரோலிய பொருட்கள் கையிறுப்பில் கூடியுள்ளதாக இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்