பங்குச்சந்தை இன்று சிறிய அளவில் ஏற்றம்.. சென்செக்ஸ், நிப்டி நிலவரம் என்ன?

Siva
செவ்வாய், 12 நவம்பர் 2024 (09:32 IST)
இந்திய பங்குச் சந்தை நேற்று சிறிய அளவில் ஏற்றம் கண்டு, வர்த்தகம் முடியும் போது கடந்த வெள்ளிக்கிழமை நிலைமைக்கு மீண்டும் திரும்பியது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில், நேற்று போலவே இன்றும் பங்குச்சந்தை சிறிய அளவில் தான் உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

இந்திய பங்குச்சந்தை வர்த்தகம் சற்றுமுன் தொடங்கிய நிலையில், மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 68 புள்ளிகள் மட்டும் உயர்ந்து 79,569 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. அதே போல், தேசிய பங்குச்சந்தை நிப்டி 37 புள்ளிகள் மட்டும் உயர்ந்து 24,519 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது.

இன்றைய பங்குச் சந்தையில் அப்போலோ ஹாஸ்பிடல், ஆக்சிஸ் வங்கி, பஜாஜ் பைனான்ஸ், பாரதி ஏர்டெல், ஹச்.சி.எல். டெக்னாலஜி, ஹீரோ மோட்டார்ஸ் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்துள்ளதாகவும், ஆசியன் பெயிண்ட், பிரிட்டானியா, சிப்லா, டாக்டர் ரெட்டி, எச்டிஎப்சி வங்கி, இந்துஸ்தான் லீவர், ஐடிசி உள்ளிட்ட பங்குகள் குறைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

பங்குச்சந்தை இன்னும் ஒரு சில நாட்களுக்கு பெரிய அளவில் ஏற்ற இறக்கம் இன்றி தான் வர்த்தகமாகும் என்றும், எனவே புதிதாக முதலீடு செய்பவர்கள் தகுந்த ஆலோசனை பெற்று முதலீடு செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.


Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்