சிதம்பரம் மக்களவைத் தேர்தல் 2019 நேரலை | Chidambaram Lok Sabha Election 2019 Live Result

Webdunia
செவ்வாய், 21 மே 2019 (22:12 IST)
[$--lok#2019#constituency#tamil_nadu--$] 

 

முக்கிய வேட்பாளர்கள்: சந்திரசேகர் (அதிமுக)-  தொல்.திருமாவளவன் (விசிக)

தமிழகத்தில் உள்ள 39 பாராளுமன்றத் தொகுதிகளில் சிதம்பரம் தொகுதியும் ஒன்று. இத்தொகுதியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்   சார்பில் சந்திரசேகர் மற்றும் திராவிட முன்னேற்ற கழகம் கூட்டணி சார்பில் தொல்.திருமாவளவன் (விடுதலை சிறுத்தைகள் கட்சி ) போட்டிடுவதால் பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

சிதம்பரம் தொகுதியின் மக்கள் தொகை 18,19,435. இதில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 14,59,735 .  ஆண் வாக்காளர்கள் எண்ணிக்கை 7,28,368. பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை 7,31,315 ஆகும். கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட சந்திரகாசி வெற்றி பெற்று எம்பியாக இருந்தார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் வேட்பாளரான தொல். திருமாவளவனை 1,28,495 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

 
[$--lok#2019#constituency#tamil_nadu--$] 
 

தமிழகத்தில் மொத்தம் 39 பாராளுமன்றத் தொகுதிகள் உள்ளன. தமிழக பொறுத்தவரை அதிமுக, திமுக கட்சிகளே முக்கிய பெரிய கட்சிகளாகும். கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற  லோக்சபா தேர்தலில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அஇஅதிமுக கட்சி தனித்துப் போட்டியிட்டு 37 தொகுதிகளிலும், புதுச்சேரியில் 1 தொகுதியிலும் வென்றது. பாஜக தலைமையிலான கூட்டணி 1 தொகுதியிலும் ( பொன்ராதாகிருஷ்ணன் கன்னியாகுமரி), பாமக (தர்மபுரி)  ஆகிய தொகுதிகளில் வென்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்