இதையடுத்து தேசிய தலைவர்களான மோடி, ராகுல் அடுத்தடுத்த நாட்களில் தமிழகத்திற்கு வருகை புரிந்து கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இன்று தமிழகம் வந்த மோடி தேனியில் ஓபி ரவிந்தரநாத்துக்கு ஆதரவாகப் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர்’ காங்கிரஸும் திமுகவும் என்னால் நிம்மதி இல்லாமல் உள்ளனர். காங்கிரஸின் நிதியமைச்சராக சிதம்பரம் இருந்த போது அவரது மகன் இந்த நாட்டைக் கொள்ளையடித்தார். இந்தியா வளர்வதைக் காங்கிரஸால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. வாரிசு அரசியலுக்கு முடிவு கட்டி குடும்ப அரசியலை பாஜக ஒழிக்கும்’ எனக் கூறினார்.