அம்மா இருந்திருந்தால் கொடுத்திருப்பார்! அரவக்குறிச்சி வேட்பாளர் யார் ? அ.தி.மு.கவில் நீடிக்கும் ’சஸ்பென்ஸ்’

வெள்ளி, 12 ஏப்ரல் 2019 (15:13 IST)
இந்திய அளவில், ஒரு சட்டமன்ற தொகுதியில் இவ்வளவு பணப்புழக்கமா ? என்றளவில், இந்திய தேர்தல் ஆணையமே தேர்தலை நிறுத்திய பெருமை அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கே சாறும், இந்நிலையில், கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி தேர்தல் என்றாலே, போதும், அத்தனை அரசியல் கட்சிகளும் போட்டி போடுவது முன்னாள் அமைச்சர் வி.செந்தில் பாலாஜி நிற்பதினாலோ, அல்லது வாக்காளர்களை கவனிக்கும் முறையோ என்றோ தெரியவில்லை என்கின்றனர் இப்பகுதியின் சமூக ஆர்வலர்கள். 
மேலும், இதே சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அரசியல் அனுபவம் வாய்ந்த பெண்மணி மற்றும் எதையும் துணிச்சலாய், தட்டிக்கேட்கும் சுபாவம் கொண்ட மல்லிகா சுப்பராயன், இந்த முறை அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் அ.தி.மு.க சார்பில் அறிவிக்கப்படுவாரா ? என்கின்றனர் இப்பகுதி மக்கள்.
 
இந்த பெண்மணி கடந்த 35 வருடங்களாகவே இரண்டு முறை அ.தி.மு.க கழகம் பிரிந்தும் ஜெயலலிதாவின் அ.தி.மு.க விலேயே இருந்து வருகின்றார். அதாவது., அப்போதைய மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர் உயிரிழந்த போது, ஜானகி அணி, ஜெயலலிதா அணி என்றும், இரட்டை புறா மற்றும் சேவல் சின்னம் என்றான போது, ஜெயலலிதாவின் சேவல் சின்னத்திலான கட்சியிலேயே இருந்துள்ளார். தற்போது மறைந்த முதல்வர் ஜெயலலிதா உயிரிழந்த போது., கழகங்கள் இரண்டான போது, அதை கட்டி காக்க, பொதுக்குழு உறுப்பினராகவே இருந்துள்ளார். இந்நிலையில் இவரது கணவர் சுப்பராயன் அண்ணா காலத்திலேயே 40 செயலாளர்களில் ஒருவராக இருந்துள்ளார். 
 
இந்நிலையில், தற்போது நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலிலும் போட்டியிட பணம் கட்டியும் கட்சி இவரை அனுமதிக்க வில்லை, இதே அம்மா இருந்திருந்தால் கொடுத்திருப்பார் என்கின்றனர் இப்பகுதியின் அ.தி.மு.க வினை சார்ந்தவர்கள். 
 
இப்படி இருக்க தற்போது,. மே மாதம் 19 ம் தேதி 4 சட்டமன்ற இடைத்தேர்தலில், கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தலில் கடந்த 8 முறை வேட்பு மனுதாக்கலுக்காக கட்சியில் அனுமதி கேட்ட போது., இதுவரை கட்சி அனுமதி கொடுக்காத நிலையில், இந்த முறை நடைபெறும் சட்டமன்ற இடைத்தேர்தலிலாவது, இவருக்கு சீட் கிடைக்குமா ? என்று எதிர்ப்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்