கார் டோரில் கத்தை கத்தையாய் பணம்: டோல் ரேட்டில் சிக்கிய விசிக பிரமுகர்கள்

Webdunia
புதன், 3 ஏப்ரல் 2019 (14:04 IST)
நாடளுமன்ற தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தமிழகம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர். 
 
இந்த சோதனையின் போது உரிய ஆவணங்கள் மற்றும் கணக்கு இல்லாமல் கொண்டு செல்லப்படும் பணத்தை பறக்கும் படையினர் கைப்பற்றி வருகின்ரனர். அந்த வகையில், திருச்சியில் இருந்து பெரம்பலூர் வழியாக அரியலூர் நோக்கி செல்லும் குறிப்பிட்ட காரில் சட்ட விரோதமாக பணம் கொண்டு செல்வதாக வந்த தகவலை அடுத்து சோதனை மேற்கொள்ளப்பட்டது. 
 
அந்த காரை மடக்கி பேரளி சுங்கச்சாவடி அருகே சோதனை நடத்தினர். அப்போது, காரின் நான்கு கதவுகளின் உள்ளே மறைத்து வைத்திருந்த ரூ.2.10 கோடி ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், காரில் இருந்த 4 பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. 
 
அதில் அவர்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் தங்கதுரை, பிரபாகரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 2 பேர் என தெரியவந்தது. இதனால் இந்த பணத்தை வாக்காளர்களுக்கு கொடுக்க எடுத்து சென்றார்களா? என விசாரணை நடைபெற்று வருகிறது. 
 
கடந்த சில தினங்களுக்கு முன்னர் திமுக பொருளாலர் துரைமுருகன் வீட்டில் ரெய்ட், வேலூர் தனியர குடோனில் மூட்டை மூட்டையய பணம் என இவை அனைத்தும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்த சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்