ஒ.பி. ரவீந்தரநாத் மற்றும் தங்க தமிழ்ச்செல்வன் ஆகிய இருவரும் அப்பகுதியில் உள்ள பெரும்பாண்மை சமூகத்தை சேர்ந்த வேட்பாளர்களாக உள்ளனர். இதனால் காங்கிரஸ் வேட்பாளருக்கு அங்கு வெற்றி வாய்ப்பு குறைவு என சொல்லப்பட்டு வருகிறது. தனது பலத்தைக் கூட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை தேனிக்கு வரும் 12 ஆம் தேதி அழைத்து வந்து பிரச்சாரம் செய்ய இருக்கிறார் ஈவிகேஎஸ்.
அதுமட்டுமில்லாமல் குடும்ப சகிதமாக தேனியில் முகாமிட்டு வாக்கு வேட்டையி ஈடுபட்டு வருகிறார். நேற்று உசிலம்பட்டி, சேடப்பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர் ‘தேனியில் ஆளும் கட்சியினர் வாக்குக்கு 500 ரூபாய் கொடுக்கிறார்கள். அவர்கள் 500 ரூபாய் கொடுத்தால் வாங்காதீர்கள். 5000 ரூபாய் கேளுங்கள். அவர்கள் கொடுக்கும் பணம் உங்கள் பணம். அவர்கள் உழைத்து சம்பாதித்தது அல்ல. பணத்தை வாங்கிக்கொண்டு அவர்களுக்கு நாமம் போட்டுக்கொண்டு என்னை வெற்றி பெற செய்யுங்கள். உங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை அனைத்தையும் நான் உடனடியாக செய்து கொடுப்பேன்’ எனப் பேசினார்.