நாடளுமன்ற தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் சமயத்தில் அதிருப்தியின் காரணமாக நிர்வாகிகளும், தொண்டர்களும் கட்சி மாறுவது வழக்கமானதுதான்.
ஆனால், இது அதிமுகவிற்கு பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. ஆம், கட்சி மாறி வந்த நிர்வாகிகளும் தொண்டர்களும் அதிமுகவிற்கு எதிராக ஸ்லீப்பர் செல்களாக செயல்படுகிறார்களாம்.
கட்சியுடன் கலந்து அவர்களின் செயல்பாடு, நடவடிக்கை, திட்டங்கள் என அனைத்து விவரங்களையும் சேகரித்துகொண்டு, இந்த தகவலை தங்களது பழைய கட்சிக்கு தெரிவிக்கின்றனராம். இதனால் எதிரணி இவர்களை விட சூப்பராக திட்டமிட்டு செயல்படுத்துகின்றனராம்.
முதலில் இதை கண்டுகொள்ளாமல் விட்டத்தன் விளைவுகள் இப்போது இவர்களை வாட்டுகிறதாம். பின்னர்தான் இதற்கு கட்சியின் புது வரவுகள்தான் காரணம் என தெரிந்துக்கொண்டு, இப்போது அவர்களை களையெடுக்கும் பணியை துவங்கியுள்ளனர்.