அம்மா தாயே.. ப்ளீஸ்!!! என் பேச்ச கேளுங்க: பிரச்சாரத்தில் கெஞ்சிய ஓபிஎஸ்

செவ்வாய், 9 ஏப்ரல் 2019 (11:26 IST)
பிரச்சாரத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தன் பேச்சை கேட்கும்படி மக்களை கெஞ்சியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் நாடாளுமன்றம் மற்றும் சட்டம்னற இடைத்தேர்தல் நெருங்க இன்னும் சில நாட்களே உள்ளது. பல்வேறு கட்சிகள் தங்களின் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். எதிர்கட்சிகளின் ஊழல்களை ஆளுங்கட்சியினரும், ஆளுங்கட்சியினரின் ஊழல்களை எதிர்கட்சிகளும் சொல்லி மாறி மாறி குறை கூறி வருகின்றனர்.
 
இந்நிலையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ராமநாதபுரம் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனை ஆதரித்து பரப்புரையில் ஈடுபட்டார். அதிமுக செய்த சாதனைகளை மூச்சு விடாமல் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு கூடியிருந்த மக்கள் வெயில் தாங்காமல் புலம்பிக்கொண்டிருந்தனர்.
 
இதனைப் பார்த்த ஓபிஎஸ் அம்மா தாயே நான் பாட்டுட்டு பேசிட்டு இருக்க நீங்க என்னனா பேசிக்குட்டே இருந்த என்ன அர்த்தம். ப்ளீஸ் என் பேச்சை கேளுங்கள் என சொன்னார். பொறுத்து பொறுத்து பார்த்த மக்கள் சற்று நேரத்தில் அங்கிருந்து கிளம்பு சென்றுவிட்டனர். இதனால் ஓபிஎஸ் சற்று நேரத்தில் பரப்புரையை முடிக்கொண்டு சென்றுவிட்டார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்