தேனி தேர்தலை ரத்து செய்ய வேண்டும்; கே.எஸ்.அழகிரி கோரிக்கை

ஞாயிறு, 7 ஏப்ரல் 2019 (15:36 IST)
வேலூர் தொகுதியில் அதிக பணப்பட்டுவாடா நடைபெற்று வருவதாக எழுந்த புகாரினால் அந்த தொகுதியில் தேர்தல் நடைபெறுமா? என்ற கேள்வி பலரது மனதில் எழுந்துள்ள நிலையில் தேனி தொகுதியிலும் அதிக பணப்பட்டுவாடா நடந்து வருவதாக புகார்கள் எழுந்துள்ளன.
 
தேனி தொகுதியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் குமார் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ். இளங்கோவனும், அமமுக சார்பில் தங்கத்தமிழ் செல்வனும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளராக ராதாகிருஷ்ணனும் போட்டியிடுகின்ரனர்.
 
இந்த நிலையில் விருதுநகரில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி, 'தேனி மக்களவைத் தொகுதியில், ஆரத்தி என்ற பெயரில் வாக்காளர்களுக்கு அதிகளவில் பணம் பட்டுவாடா நடைபெறுவதாகவும், காவல் துறையினரும் இந்த பணப்பட்டுவாடா செயலுக்கு துணை போவதாகவும் புகார் தெரிவித்த அவர், தேனியில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
 
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிடும் தொகுதியில் அந்த கட்சியின் தலைவரே தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்