மோடிக்கு வாக்குக் கேட்டா கல்லால அடிங்க... பல்லை உடையுங்க - எம்.எல்.ஏ.ஆவேசம்

Webdunia
திங்கள், 25 மார்ச் 2019 (12:06 IST)
வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. சில கட்சி வேட்பாளர்கள் மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காகப் பேசி சர்சைகளில் சிக்குவது வாடிக்கையாகி வருகிறது. அதே போல தற்போது கர்நாடக மாநில மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி எம்.எல்,ஏ.சர்ச்சை உண்டாக்கும் வகையில் பேசியிருக்கிறார்.
முன்னாள் பிரதமரான தேவகவுடா தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா தளம் இத்தேர்தலில் காங்கிரஸ்உடன் இணைந்து போட்டியிடுகிறது.
 
இந்நிலையில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் எம்.எல்,.ஏ., சிவவலிங்கா கவுடா அரசிக்ரே என்ற இடத்தில் நேற்று பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அவர் கூறியுள்ளதாவது:
 
'வெளிநாடுகளில் உள்ள கறுப்பு பணத்தை மீட்பேன். ஒவ்வொரு இந்தியரின் வங்கிக் கணக்கிலும் ரூ, 15 லட்சம் டெபாஸிட் செய்வேன். என்று மோடி கடந்த 2014 ஆம் ஆண்டு தேர்தலின் போது கூறினார். ஆனால் இந்த 5 ஆண்டுகளில் அவர் இந்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.

உங்களிடம் யாராவது மோடிக்கு வாக்கு கேட்டு வந்தால் ரூ. 15 லட்சம் பற்றிக் கேளுங்கள். மோடிக்கு வாக்குக் கேட்டு வந்தால் அவர்களின் கன்னத்தில் அறையுங்கள், அப்படியும் மோடிக்கு  ஆதரவாக கோஷ்மிட்டால் அவர்களுடைய வாய் மற்றும் பல்லை உடையுங்கள் '. இவ்வாறு  பேசினார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்