இஷ்டத்துக்கு சம்பளத்தை ஏற்றிய ஸ்வீட் நடிகை

Webdunia
செவ்வாய், 1 ஆகஸ்ட் 2017 (16:09 IST)
இஷ்டத்துக்கு சம்பளத்தை ஏற்றியதால், இனிப்பு நடிகைக்குப் பதில் வேறொரு நடிகையை போடச் சொல்லிவிட்டாராம் ஒல்லி நடிகர்.



 
வெப் சீரியலில் கெட்ட வார்த்தையை சகஜமாகப் புழங்கவிட்ட இயக்குநர் அவர். ஒல்லி நடிகரை வைத்து அவர் இயக்கிய இரண்டெழுத்துப் படம் ஹிட்டானதால், அதன் இரண்டாம் பாகத்தையும் எடுக்கப் போகின்றனர். அடுத்த மாதம் ஷூட்டிங் தொடங்க உள்ள நிலையில், ஹீரோயின் விஷயத்தில் சிக்கல் என்கிறார்கள்.

காரணம், அந்தப் படத்தில் நடித்தபோது 60 லட்சம் சம்பளம் வாங்கினார் ஸ்வீட் நடிகை. தற்போது, தல மற்றும் தளபதியோடு ஒரே நேரத்தில் நடித்திருப்பதால் தன் மார்க்கெட் உச்சத்தில் இருப்பதாகவும், தனக்கு 2 கோடி ரூபாய் கொடுத்தால் தான் இரண்டாம் பாகத்தில் நடிப்பேன் என்றும் கூறியிருக்கிறார். கடுப்பான ஒல்லி நடிகர், ‘இந்த நடிகையைத் தூக்கிவிட்டு வேறொரு நடிகையைப் போட்டுவிடுங்கள்’ என்றாராம். ஆனாலும், ஒண்ணே கால் கோடிக்கு சம்பளத்தைப் பேசி முடிக்கப் போகிறார்கள் என்கிறது நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்துவந்த தகவல்.
அடுத்த கட்டுரையில்