போகிற போக்கைப் பார்த்தால், மணக்கும் காமெடி நடிகரும் அரசியலில் குதிப்பார் போலிருக்கிறது.
காமெடியனாக இருந்து ஹீரோவாக உயர்ந்திருக்கும் மணக்கும் காமெடி, தனக்கு சப்போர்ட்டாக ஒரு கட்சியை வைத்திருக்கிறாராம். சில நாட்களுக்கு முன்பு காவிக்கட்சிப் பிரமுகர் ஒருவரை மணக்கும் காமெடி அடித்தபோது, அந்தக் கட்சிதான் காப்பாற்றியதாம். அதேபோல், சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற மணக்கும் காமெடி நடித்துள்ள படத்தின் இசை வெளியீட்டு விழாவில், கலைவாணர் அரங்கமே நிரம்பி வழிந்தது. எல்லாம் அவருடைய ரசிகர்கள் என்று சொல்லிக் கொண்டாலும், கட்சியின் உறுப்பினர்கள் தான் ரசிகர்கள் என்ற பெயரில் கலந்து கொண்டனர் என்கிறார்கள்.
மணக்கும் காமெடி போடுகிற பிளானைப் பார்த்தால், அவரும் அரசியலில் குதிப்பது உறுதி என்கிறார்கள். அதனால்தான், தைரியமாக சிவ நடிகர் படத்திற்கு எதிராக அதேநாளில் தன்னுடைய படத்தை ரிலீஸ் செய்கிறாராம்.