ரூ. 4 கோடி சம்பளம் கேட்கும் லண்டன் நடிகை

Webdunia
வெள்ளி, 16 ஜூன் 2017 (16:13 IST)
லண்டனில் இருந்துவந்து கோலிவுட்டில் கொடி நாட்டியிருக்கும் நடிகை. 4 கோடி ரூபாய் சம்பளம் கேட்கிறாராம்.


 


பிளேபாய் நடிகருக்கு ஜோடியாக தமிழ்ப் படத்தில் அறிமுகமானவர் லண்டன் நடிகை. அதுதான் அவருக்கு முதல் சினிமாப் படமும் கூட. அதன்பின், அடுத்தடுத்து இரண்டு படங்களில் உடலை ஏற்றி, இறக்கும் நடிகருடன் நடித்தார். வரிசையாக தமிழ்ப் படங்களில் நடித்து வருபவர், அவ்வப்போது தெலுங்கு மற்றும் ஹிந்திப் படங்களிலும் நடிக்கிறார்.

உச்ச நட்சத்திரம் ஜோடியாக பிரமாண்ட இயக்குநரின் படத்தில் தற்போது நடித்து முடித்துள்ள லண்டன் நடிகை, அடுத்ததாக ஹாலிவுட் படத்தில் கமிட்டாகியுள்ளார். எனவே, தன்னைச் சந்திக்க வரும் தயாரிப்பாளர்களிடம், 4 கோடி ரூபாய் சம்பளம் கேட்கிறாராம். ‘ஹாலிவுட், பாலிவுட்டில் நடிக்கிறேன். தமிழில் சூப்பர் ஸ்டார், இளைய தளபதி, ஒல்லி நடிகர் என முன்னணி நடிகர்களுடனும் நடித்துவிட்டேன். நான் இவ்வளவு சம்பளம் கேட்கக் கூடாதா?’ என்று செல்லமாகக் கேட்கிறாராம் நடிகை.
அடுத்த கட்டுரையில்