நடிக்க வருகிறார்களா நதியா மகள்கள்?

Webdunia
ஞாயிறு, 11 ஜூன் 2017 (21:26 IST)
கடந்த 90களில் கோலிவுட் திரையுலகையே கலக்கியவர் நடிகை நதியா. இவருடன் நடிக்க பிரபல ஹீரோக்கள் போட்டி போட்டார்கள். 'பூவே உனக்காக' முதல் இவர் நடித்த பல படங்கள் ஹிட். இந்த நிலையில் அமெரிக்க மாப்பிள்ளையை திருமணம் செய்து கொண்டு கோலிவுட் திரையுலகில் இருந்து சில ஆண்டுகள் விலகி, பின்னர் மீண்டும் அம்மா வேடத்தில் நடிக்க தொடங்கினார்.



 


இந்த நிலையில் நதியாவின் இரண்டு மகள்களின் புகைப்படங்கள் தற்போது சமூக இணையதளங்களில் வலம் வருகிறனர். அச்சு அசலாக நதியா போலவே இருக்கும் இரு மகள்களும் விரைவில் திரையுலகில் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

திரையுலகில் மகள்களை நுழைக்க வேண்டும் என்பதற்காக நதியாவே இந்த புகைப்படங்களை வெளியிட்டாரா? அல்லது தற்செயலாக வெளியானதா என்று தெரியவில்லை என்றாலும் விரைவில் இதுகுறித்து நதியா விளக்கம் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்