மில்க் நடிகையின் மீது பொறாமைப்படும் நடிகைகள்

Webdunia
வெள்ளி, 11 ஆகஸ்ட் 2017 (20:52 IST)
மில்க் நடிகை மீது, கல்யாணம் ஆன பல நடிகைகள் பொறாமையில் இருக்கிறார்களாம்.


 
 
தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை நடிகைகளின் மார்க்கெட் என்பது, அவர்களுக்குத் திருமணமாகும் வரை மட்டும்தான். 35 வயதில் கூட கல்யாணம் பண்ணிக் கொள்ளாமல் ஹூரோயினாக நடிக்கலாம். ஆனால், 25 வயதாக இருந்தாலும் திருமணம் நடந்துவிட்டால், அக்கா, அண்ணி வேடங்கள் மட்டும்தான் கிடைக்கும்.
 
ஆனால், மில்க் நடிகையின் விஷயத்தில் மட்டும் இது தலைகீழாய் நடக்கிறது. இயக்குநரைத் திருமணம் செய்துகொண்டு, உடனேயே விவாகரத்தும் செய்துவிட்டார் நடிகை. ஆனாலும், ஹீரோயினாக பல படங்களில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார். இதைப் பார்த்து கல்யாணமான சில ஹீரோயின்கள் மில்க் நடிகைமீது பொறாமையில் இருக்கிறார்களாம்.
அடுத்த கட்டுரையில்