வெளிநாட்டு நடிகை செய்யும் செயல்களால், நொந்து நூடுல்ஸ் ஆகிவருகிறாராம் இயக்குநர்.
‘சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தான் ஆண்டி’ என்றொரு பழமொழி உண்டு. சும்மா இருந்தாலே, படத்துக்கு முட்டுக்கட்டை போட ஆயிரம் காரணத்துடன் அலப்பறை கொடுப்பர். இதில், இந்த நடிகை வேறு அடிக்கடி செய்யும் செயல்களால், படத்துக்கு எங்கே தடை போட்டுவிடுவார்களோ என்று பயப்படுகிறாராம் இயக்குநர்.
பிரமாண்ட இயக்குநர் எடுத்துள்ள ரோபோ படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார் இந்த வெளிநாட்டு நடிகை. முதலில் படத்தைப் பற்றிய தகவல்களைப் பற்றி வெளியில் பேசினார் என்றொரு சிக்கல் கிளம்பியது. இயக்குநர் கேட்டுக் கொண்டதன் பேரில் படத்தைப் பற்றி வெளியில் பேசுவதைத் தவிர்த்தார். பின்னர், அரைகுறை ஆடையுடன் இருந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டார். அதற்கு கண்டனங்கள் எழுந்தபோது, மறுபடியும் இயக்குநர் வேண்டுகோள் விடுத்தார். தற்போது ‘பீட்டா’வுக்கு ஆதரவாக விளம்பரத்தில் நடித்திருக்கிறார். மாட்டிறைச்சி தடைக்கு எதிரான போராட்டங்கள் வலுப்பெற்று வரும் நிலையில், நடிகை ‘பீட்டா’ விளம்பரத்தில் நடித்திருப்பது இயக்குநரை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.