தோனிக்கு இன்னும் வயதாகவில்லை – வெள்ளை தாடி குறித்து தாயார் விளக்கம்!

Webdunia
செவ்வாய், 12 மே 2020 (16:07 IST)
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி வெள்ளை தாடியுடன் இருப்பது குறித்து பேசியுள்ளார்.

சமீபத்தில் நடந்த போட்டியில் அவர் பங்கேற்காத நிலையில் அவர் ஐபிஎல் போட்டியில் பங்கேற்பார் என எதிர்ப்பார்கப்பட்ட நிலையில்,கொரொனா வந்து அனைத்து தொழில்களையும் முடக்கிவிட்டது. ஐபிஎல் போட்டிகள் நடக்காததால் ரசிகர்கள் கடுப்பில் உள்ளனர். ஆனால் அவ்வப்போது, நட்சத்திரங்கள் வெளியிடும் புகைப்படம் , வீடியோ ரசிகர்களுக்கு ஆதரவாக உள்ளது.

இந்நிலையில், தல தோனி நடிகர் அஜித் போன்று சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் தனது மகளுடன் வீட்டில் ஜாக்கிங் செய்வது மற்றும் மோட்டார் சைக்கிளில் வலம் வருவது போன்ற வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இந்நிலையில் தனது மகனின் வெள்ளை தாடி குறித்து பேசியுள்ள அவரின் தாயார் ‘ என் மகனுக்கு அப்படி ஒன்றும் வயதாகவில்லை. எந்த தாய்க்குமே அவர்களது மகன் வயதாவதாக தெரியமாட்டேன்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்