ஷூட்டிங்கே ஆரம்பிக்கலை… அதுக்குள்ள சண்டையா?

Webdunia
வெள்ளி, 5 மே 2017 (18:35 IST)
இரண்டெழுத்து இயக்குநரின் புதிய படத்தில் கமிட்டாகியிருக்கும் இரண்டு நடிகைகளுக்குள் போட்டி தொடங்கிவிட்டது என்கிறார்கள்.


 

 
போலீஸ் கதையென்றால், இரண்டெழுத்து இயக்குநருக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி. ‘லயன்’ படத்தை மூன்று பாகங்களாக எடுத்தவர், அடுத்து ‘கடவுள்’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கும் வேலைகளில் இருக்கிறார். முதல் பாகத்தில் நடித்த சின்ன நம்பர் நடிகை, மலையாள வாரிசு நடிகை என இந்தப் படத்தில் இரண்டு ஹீரோயின்கள்.
 
இன்னும் ஷூட்டிங் தொடங்கவில்லை. ஆனால், அதற்குள்ளாகவே இரண்டு நடிகைகளுக்கும் முட்டிக் கொண்டதாம். ‘எனக்குத்தான் முக்கியத்துவம்’, ‘இல்லையில்லை, நான் தான் அதிக காட்சிகளில் வருவேன்’ என இருவரும் மறைமுகமாக மோதிக்கொள்ள ஆரம்பித்திருக்கிறார்களாம்.
அடுத்த கட்டுரையில்