பட்ஜெட் விலையில் பக்காவான 5ஜி ஸ்மார்ட்போன்! - Vivo T2 5G ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்!

Webdunia
செவ்வாய், 18 ஏப்ரல் 2023 (11:24 IST)
இந்தியாவில் 5ஜி அறிமுகமானது தொட்டு பல 5ஜி ஸ்மார்ட்போன்கள் வெளியாகி வரும் நிலையில் சிறப்பான அம்சங்களோடு Vivo T2 5G தற்போது இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது.

இந்தியாவில் பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்ட ஸ்மார்ட்போன்களை வெளியிட்டு வரும் நிறுவனங்களில் விவோ நிறுவனமும் ஒன்று. சமீபத்தில் இந்தியாவில் 5ஜி அறிமுகமான நிலையில் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் விதமாக அதிநவீன 5ஜி சிறப்பம்சத்துடன் Vivo T2 5G ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது விவோ நிறுவனம்.

Vivo T2 5G ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்:
  • குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 695, 6.38 இன்ச் டர்போ அமேலெட் டிஸ்ப்ளே
  • ஆக்டாகோர் ப்ராஸசர், அட்ரினோ 619 ஜிபியூ
  • 6 ஜிபி / 8 ஜிபி ரேம், 128 ஜிபி இண்டெர்னல் மெமரி
  • ஆண்ட்ராய்டு 13, ஃபண்டச் ஓஎஸ் 13 ஆபரேட்டிங் சிஸ்டம்
  • 16 எம்.பி முன்பக்க செல்ஃபி கேமரா
  • 64 எம்.பி + 2 எம்.பி பின்பக்க டூவல் கேமரா
  • வைஃபை, ப்ளூடூத், ஃபிங்கர் சென்சார்,
  • 4500 mAh பேட்டரி, 44W ஃபாஸ்ட் சார்ஜிங், டைப் சி கேபிள்

இந்த Vivo T2 5G ஸ்மார்ட்போன் நைட்ரோ ப்ளேஸ், வெலாசிட்டி வேவ் ஆகிய இரண்டு வண்ணங்களில் கிடைக்கிறது.

6 ஜிபி ரேம்/ 128 ஜிபி மெமரி கொண்ட மாடல் ரூ.18,999 க்கும், 8 ஜிபி ரேம் / 128 ஜிபி மெமரி கொண்ட மாடல் ரூ.20,999க்கும் விற்பனையாகி வருகிறது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்