நம்மையே கார்ட்டூனாக மாற்றும் ஹைக்மோஜி! – ட்ரெண்டாகும் எமோஜிக்கள்!

Webdunia
புதன், 19 பிப்ரவரி 2020 (13:30 IST)
ஹைக் சமூக செயலி வெளியிட்டுள்ள ஹைமோஜி ஆப்சன் நெட்டிசன்களிடையே பரவலாக ட்ரெண்டாகி வருகிறது.

பிரபல வீடியோ காலிங் செயலியான ஹைப் சாட்டிங்கிற்காக பரவலாக பயன்படுத்தப்படுகிறது. வாட்ஸப், மெசஞ்ஜர் போன்றே சாட்டிங்கிற்கு ஹைப் பயன்படுத்தப்பட்டாலும் மற்ற சமூக செயலிகள் போல பரவலாக உபயோகத்தில் இல்லை. தங்களது செயலியை பலரும் உபயோகப்படுத்த வைக்க ஹைக்கும் பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

தற்போது ஹைக் செயலியில் புதிதாக வந்துள்ள ஹைக்மோஜி வசதி பலரையும் கவர்ந்துள்ளது. மற்ற செயலிகளிலும் எமோஜி ஸ்டிக்கர்கள் நிறைய இருந்தாலும் ஹைக்மோஜியின் சிறப்பம்சமே நமது உருவத்தையே எமோஜியாக மாற்றிக் கொள்ளலாம் என்பதுதான். கோபமாக, சந்தோசமாக, சோகமாக என பலவித ரியாக்சன்களில் நம்மை நாமே படமெடுத்து அதை கார்ட்டூன் எமோஜி ஸ்டிக்கராக மாற்றி கொள்ளலாம். மற்றவர்களோடு உரையாடும்போது ஸ்டிக்கர்களுக்கு பதிலாக இந்த ஹைக்மோஜிக்களை பயன்படுத்தலாம்.

இதனால் இந்த ஹைக்மோஜி பலரை கவர்ந்துள்ளது. பலர் தங்கள் புகைப்படங்களை ஹைக்மோஜிக்களாக மாற்றி இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்