முதன்முதலில் இந்தியாவில் மொபைல் போன் அறிமுகமானபோது அனைவரும் மொபைல் போன் என்று கூறமாட்டார்கள். நோக்கியா போன் என்றே கூறுவார்கள். அந்த அளவுக்கு ஆரம்ப காலகட்டங்களில் மக்களின் மனதில் இடம் பிடித்திருந்தது நோக்கியா போன். ஆனால் தற்போதைய ஸ்மார்ட்போன் போட்டியில் நோக்கியா போன் காணாமல் போய்விட்டது.
இந்நிலையில் கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன் மக்களின் மனதை கவர்ந்த நோக்கியா 3310 மீண்டும் வெளிவரவுள்ளது. 4ஜி உள்பட இப்போதைய டெக்னாலஜி அம்சங்களுடன் இணைந்து சுமார் ரூ.4000 விலையில் விரைவில் இந்த போன் வெளிவரவுள்ளதை நோக்கியா நிறுவனம் உறுதி செய்துள்ளது.
நோக்கியா 3310 மட்டுமின்றி நோக்கியா P1, நோக்கியா D1C, நோக்கியா 5 மற்றும் நோக்கியா 3 ஆகிய புதிய மாடல் ஸ்மார்ட்போன்களும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போன்கள் இம்மாத இறுதியில் பார்சிலோனாவில் நடைபெறும் டெக்னாலஜி கண்காட்சியில் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக நோக்கியா நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.