jio-வின் பங்குகளை வாங்கவுள்ள Facebook

Webdunia
புதன், 25 மார்ச் 2020 (21:05 IST)
jio-வின் பங்குகளை வாங்கவுள்ள Facebook

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் 10% பங்குகளை வாங்குவதற்கான பேச்சுவார்த்தையை பேஸ்புக் நிறுவனம் நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்டது ஜியோ நெட்வொர்க். இந்த நெட்வொர்க் குறுகிய காலத்தில் அதன் தலைவர் முகேஷ அம்பானியில் அதிரடி சலுகைகள் திட்டங்கள் மூலம் நாட்டின் முன்னணி நெட்வொர்க் ஆக முன்னேறியது.

இந்த நிலையில் நாடு முழுவதும் சுமார் 37 கோடி வாடிக்கையாளர்கள் ஜியொஇ நெட்வொர்க்கிற்கு உள்ளனர்.

எனவே இதன் 10 விழுக்காடு பங்குகளை பேஸ்புக் நிறுவனம் வாங்கப் போவதாகவும் இதுகுறித்த பேச்சு வார்த்தை நடத்தியுள்ளதாகவும், தகவல்வெளியாகிறது.   மேலும் கொரோனா வைரஸ் தொற்றால் ஜியோ – பேஸ்புக் நிறுவனத்தில் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை தடைபட்டுள்ளதாக தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்