அதிரடி கேஷ்பேக் ஆஃபர்: பிஎஸ்என்எல் நவராத்திரி!!

Webdunia
சனி, 23 செப்டம்பர் 2017 (14:54 IST)
நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு பிஎஸ்என்எல் நிறுவனம் புதிய சலுகை ஒன்றை அறிவித்துள்ளது. இதில் பிஎஸ்என்எல் ரீசார்ஜ் செய்வோருக்கு 50% கேஷ்பேக் வழங்கப்படுகிறது. 


 
 
வழக்கமாக பண்டிகை காலங்களில் விசேஷ சலுகைகளை வழங்குவது போல, இம்முறையும் பிஎஸ்என்எல் கேஷ்பேக் சலுகையை வழங்கியுள்ளது.
 
இந்த சலுகை செப்டம்பர் 25 ஆம் தேதி முதல் அக்டோபர் 2 ஆம் தேதி வரை புதிய விஜய் ஆஃபர் மூலம் வழங்கப்படும். இந்த சலுகை STV42, 44, 65, 69, 88 மற்றும் 122 ரீசார்ஜ் திட்டங்களுக்கு வழங்கப்படுகிறது. 
 
மேலும் பிஎஸ்என்எல் நிறுவனம் ஜியோ போன் போன்று, மொபைல் போனை ரூ.2000 பட்ஜெட்டில் வெளியிட திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த போன் திட்டம் மைக்ரோமேக்ஸ் மற்றும் லாவா நிறுவனங்களுடன் இணைந்து செய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்