ஆமணக்கு எண்ணெய்யின் பயன்கள் !!

Webdunia
ஞாயிறு, 28 பிப்ரவரி 2021 (00:08 IST)
அடர்த்தியான‌ கண் இமைகள் வேண்டும் என்று விரும்புவர்களுக்கு ஆமணக்கு எண்ணெய் ஒரு தீர்வாக அமையும். இயல்பாகவே ஆமணக்கு எண்ணெய் முடி வளர்ச்சியை தூண்டுகிறது. 
 
ஆமணக்கு எண்ணெய் அடர்த்தியான கண் இமைகள் மற்றும் கண் இமைகள் வளர்ச்சிக்காகவும் பயன்படுத்தபட்டு வருகின்றது.
 
ஆமணக்கு எண்ணெய், வைட்டமின் ஈ மற்றும் பிற புரதங்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளதாகும். இது பூசண எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு உடையது. இது முடி வளர்ச்சி மற்றும் முடி உடைவதை நீக்கி வலுபடுத்தவும் உதவுகிறது. இதில் எதிர்ப்பு அழற்சி அமிலங்கள் நிறைந்து உள்ளது.
 
தூய, இயற்கையான மற்றும் குளிர் படுத்தப்பட்ட ஆமணக்கு எண்ணெய் பயன்படுத்த வேண்டும். ஆமணக்கு எண்ணெய் இரவில் தூங்க செல்வதுக்கு முன்பு பயன்படுத்த வேண்டும்.
 
முதலில் சாதாரண நீர் கொண்டு உங்கள் முகம் மற்றும் கண்களை கழுவ வேண்டும். பின்பு நல்ல காய்ந்த துண்டு பயன்படுத்தி அதை தொடைக்க வேண்டும். பின்பு சில துளி ஆமணக்கு எண்ணெய்யை எடுத்து தூரிகையால் கண் இமைகளின் தொடக்கத்தில் இருந்து பூசவேண்டும்.
 
கண் பகுதியில் எண்ணெய் இருந்தால் அதை தொடைத்து விடலாம். அடுத்த நாள் காலை கண் இமைகளை சுத்தம் பண்ணி விடலாம். இப்படி ஆமணக்கு எண்ணெய் கண் இமைகளுக்கு விட்டு வருவது முக்கியமானதாகும்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்