முகத்தை பளிச்சிட தக்காளியை வைத்து செய்யப்படும் அழகு குறிப்புகள்...!

Webdunia
பெரும்பாலான பெண்கள் முகத்துக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை கழுத்திற்கு கொடுப்பதில்லை. இதனால் கழுத்தில் கறுப்புக்கயிறு கட்டியது போல்  கருவளையம் தோன்ற விடும். இதனை தக்காளி பேஸ்ட்டால் விரட்டி விடலாம்.தக்காளி முகத்தில் சுருக்கம் விழாமல் தடுக்கிறது. மேலும் இது தோல்களை  பளபளக்க செய்கிறது.
 
பழுத்த தக்காளியை நன்கு பசைப்போல விதையுடன் சேர்த்து அரைத்து, முகத்தில் தடவி, 20 முதல் 30 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்து  வந்தால் சருமத்தில் உள்ள எண்ணெய் பசை, கருமை நிறம் மறையும்.
 
தக்காளி குளிர்ச்சியானது. இதனுடன் வெள்ளரிச்சாறை சம அளவில் எடுத்து பஞ்சில் நனைத்து முகத்தில் தடவி, காய்ந்தவுடன் கழுவ வேண்டும். தொடர்ந்து  செய்து வந்தால், பருக்களால் ஏற்பட்ட தழும்புகள் மறையும்.
 
தக்காளி சாறு அரை டீஸ்பூன் தேன்அரை டீஸ்பூன் சமையல் சோடா ஒரு சிட்டிகை இந்த மூன்றையும் கலந்து கொள்ளுங்கள். இந்த பேஸ்ட்டை கருவளையத்தின் மேல் பூசி 10 நிமிடம் கழித்து கழுவுங்கள். கருவளையங்கள் காணாமல் போகும்.
 
நீண்ட நாட்களாக முகத்தை சரிவர பராமரிக்காதவர்களின் முகத்திலுள்ள செல்கள் இறந்து போய் முகம் பொலிவிழந்து விடும். இப்படிப்பட்டவர்கள் ஒரு  தக்காளியின் சாறுடன் கால் டீஸ்பூன் ரவையைக் நன்றாக கலந்து முகத்தில் தேய்த்து கழுவி வந்தால் முகம் பளபளப்பாகும்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்